சமகால அரசியலை கிழித்தெடுக்கும் வசனங்களுடன் வெளிநாட்டு வாழ் தமிழ் தொழிலாளர்களின் வாழ்வியலை கண்முன்னே கொண்டுவரும் "உழைப்பாளர் தினம் "


Posted July 23, 2024 by suriyanarayanan

சமகால அரசியலை கிழித்தெடுக்கும் வசனங்களுடன் வெளிநாட்டு வாழ் தமிழ் தொழிலாளர்களின் வாழ்வியலை கண்முன்னே கொண்டுவரும் "உழைப்பாளர் தினம் "

 
டுலேட் ,வட்டாரவழக்கு மற்றும் காதலிசம்  ஆகிய திரைப்படங்களில் நாயகனாக நடித்த திரு. சந்தோஷ் நம்பிராஜன் அவர்கள் நாயகனாக நடிக்கும்  உழைப்பாளர் தினம் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது .இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களாக அறிமுகமாகி உள்ள அறிமுக தயாரிப்பாளர் பாண்டிதுரை நீதிப்பாண்டி, ஆர் ராஜேந்திரன் நடிகர் & தயாரிப்பாளர் சிங்கப்பூர் துரை ராஜ் தயாரிப்பாளர் கார்த்திக் சிவன், தயாரிப்பாளர் கடலூரான் காஜா தயாரிப்பாளர் சரஸ் தயாரிப்பாளர் பொன்னுசாமி புருஷோத்தமன் மற்றும் தயாரிப்பாளர் பிரேம்சந்த நம்பிராஜன் இதன் நிர்வாக தயாரிப்பாளர் தி. சம்பத்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளஉழைப்பாளர் தினம் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியது.சமகால அரசியலை கிழித்தெடுக்கும் வசனங்களுடன் வெளிநாட்டுவாழ் தமிழ் தொழிலாளர்களின் வாழ்வியலை கண்முன்னே கொண்டுவரும் படைப்பாக உழைப்பாளர் தினத்தின் முன்னோட்டம் அமைந்துள்ளது .திரு .சந்தோஷ் நம்பிராஜன் மற்றும் நாயகியாக நடித்துள்ள கன்னட திரை உலகை சார்த்த குஷி ஆகியோரின் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது.மேலும் இவர்களின் காதல் காட்சிகள் உணர்வு பூர்வமான குடும்ப காட்சிகளில் இவர்களின் நடிப்பு அருமையாக உள்ளது . சந்தோஷ் நம்பிராஜன் பேசும் அரசியல் தமிழகத்தில் அதிர்வலைகளை உண்டாக்கும் என்பதில் அச்சமில்லை. இதன் தொழில்நுட்ப கலைஞர்களாக ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் துரைக்கண்ணு மற்றும் நட்சத்திரம் பிரேம்குமார், பட தொகுப்பாளர் கோடீஸ்வரன், இசையமைப்பாளர் மசூத் மற்றும் பின்னணி இசை மாறன் திரைக்கதை ஜான் பாபுராஜ் உதவி இயக்குனர்களாக தேவசந்திரன், அபித் ராமநாதன் மக்கள் தொடர்பாளர் நித்திஷ் ஆகியோர் பணியாற்றி உள்ளனர் .மேலும் திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் திரைப்படத்தின் வண்ண தரப்படுத்தல் (DI) TSMW செய்து உள்ளனர் . வரும் ஜூலை 7 திகதி சிங்கப்பூரில் இந்த திரைப்படத்தின் பிரத்தியேக காட்சிவெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.தமிழகத்தில் இந்த திரைப்படத்தை விக்கி பிலிம்ஸ் காசிநாதன் அவர்கள் வெளியீடு செய்கிறார்கள்.
-- END ---
Share Facebook Twitter
Print Friendly and PDF DisclaimerReport Abuse
Contact Email [email protected]
Issued By suriyanarayanan
Phone 07708848567
Business Address 201 voc street
cuddalore
Country India
Categories Editorial , Entertainment , Movies
Tags uzhaipalarthinam , tsmw , santhoshnambirajan , ut , nambirajancinemas , snr
Last Updated July 23, 2024